சேலத்தில் தனியார் பேருந்தும் ஈச்சர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20 பேர் காயமடைந்து இருக்கிறார்கள். விபத்தில் ஈச்சர் லாரியின் முன்பக்கம் நொறுங்கிய நிலையில் அதன் உள்ளே படுகாயங்களுடன் ஓட்டுநர் சிக்கி இருக்கிறார்.

சேலம் மாவட்டம், அரூர் தேசிய நெடுஞ்சாலையில் அரூரில் இருந்து சேலம் நோக்கி தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து, சேலத்திலிருந்து அரூர் நோக்கி சென்று கொண்டிருந்த ஈச்சர் லாரி சேலம் அடுத்த அயோதியபட்டினம் தேவாங்கர் காலனி, பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது எதிர் திசையில் இருக்கும் வாகனத்தை முந்துவதற்காக அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனால் எதிரே வந்த பேருந்தும் லாரியும் நேருக்க நேர் மோதி விபத்து ஏற்ப்படுள்ளது. மேலும், இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20-கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் ஈச்சர் லாரியின் முன்பகுதி முழுவதுமாக சேதமடைந்த நிலையில் லாரியின் ஓட்டுனர் படுகாயங்களுடன் லாரியின் உள்ளே சிக்கியுள்ள நிலையில் அப்பகுதி பொதுமக்கள் 2 நேரத்திற்கு மேலாக போராடி அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.  இதனால் சேலம் அரூர் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரமாக போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டுள்ளது. மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More : காதலியை சேர்த்து வைக்கக் கோரி அட்ராசிட்டி..!! கிணற்றுக்குள் வசமாக சிக்கிய காதலன்..!! எடப்பாடியில் பரபரப்பு..!!