கேரளாவில் தனியார் வங்கி மேலாளர் செய்த மோசடி தொடர்பாக திருப்பூரில் டிபிஎஸ் வங்கியில் இரண்டாவது நாளாக நடைபெற்ற சோதனையில் 900 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. கோழிக்கோடு மாவட்டம் வடகரை பகுதியில் உள்ள மகாராஷ்டிரா என்ற வங்கியில் மேலாளராக ஜெயக்குமார் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், வாடிக்கையாளர்கள் அடகு வைக்கும் நகைகளை அவர்களுக்கு தெரியாமல் வேறொரு வங்கியில் வைத்து நீண்ட நாட்களாக மோசை செய்து வந்துள்ளானர்.
இதனை தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் வைத்திருந்த 17 கோடி மதிப்பிலான 26.8 கிலோ தங்க நகைகளை திருப்பூரில் உள்ள டிபிஎஸ் வங்கி ஊழியரான நண்பர் கார்த்தி என்பவர் உதவியுடன் அடகு வைத்து மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அதன் இரண்டு கிளைகளிலும் கடந்த இரண்டு நாட்களாக கேரள போலீஸ் சோதனை நடத்தி வந்தனர் இதில் மட்டும் இதுவரை மொத்தமாக 5 கிலோ 300 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். வங்கி மேலாளார் வாடிக்கையாளர்கள் அடகு வைக்கும் நகைகளை மோசடி செய்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
Read More : தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட திருடன்..!! போலீசாரிடம் சிக்கியது எப்படி…?