புதுச்சேரியில் எட்டு டிராவல் பக்குகளை மொத்தமாக விற்பனை செய்யக்கூடிய நோக்கத்தில் கடைக்காரர் ஒருவர் தன்னுடைய இலட்ச ரூபாய் மதிப்பிலான ஸ்கூட்டரை பறிகொடுத்துள்ளார்.
புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள சின்ன சுப்பராயப்பிள்ளை வீதியில் அமீன் கான் என்பவர் டிராவல் பேக் டோல் பேக் உள்ளிட்ட பொருட்களை விற்கும் கடை ஓன்று நடத்தி வருகிறார். இந்த கடையில் வியாழக்கிழமை டிப் டாப்பாக ஒருவர் வந்துள்ளார். அந்த நபர் நீண்ட நேரம் பேசி எட்டு பேக்குகளை தேர்வு செய்து தான் வாங்கிக்கொள்வதாக கூறியுள்ளார். இதனையடுத்து, அதற்க்கு உண்டான தொகையை கொடுப்பதற்காக பர்ஸை எடுத்துப் பார்த்தபோது உள்ளே பணம் இல்லாததைக் கண்டு பணம் இல்லை என்று அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேலும், அவரிடம் இருந்த 500 ரூபாயை மட்டும் எடுத்து தனது பர்ஸில் இது மட்டும்தான் தற்போதைக்கு உள்ளது என்று கூறி உள்ளார். இதனை அடுத்து அந்த நபர் கடைக்காரரிடம் உங்களுடைய இருசக்கர வாகனத்தை கொடுங்கள் தனது வீட்டிற்கு சென்று பணத்தை எடுத்து வருவதாக கூறியுள்ளார். பார்பதற்கு டிப் டாப்பாக இருப்பதால் அந்த நபர் கூறியதை நம்பி 500 ரூபாயை மட்டும் வாங்கிக் கொண்டார். இதனைதொடர்ந்து, தனது ஸ்கூட்டர் கொடுத்து கடை ஊழியர் ஒருவரையும் அவருடன் அனுப்பி வைத்துள்ளார். வெயிட் டவுன் பகுதியில் அங்கு பூட்டி இருந்த ஒரு வீட்டின் அருகே வாகனத்தை நிறுத்தினார்.
பின்னர், அந்த நபர் அருகே உள்ள உறவினர் வீட்டில் சாவி வாங்கி வருகிறேன் நீங்கள் இங்கேயே காத்திருங்கள் என கூறி விட்டு சென்றுள்ளார். நீண்ட நேரமாக சென்ற நபர் திரும்பி வராததால் பொறுமைய இழந்த கடை ஊழியர் அமீன் கானிடம் கூறியுள்ளார். இதுதான் 500 ரூபாயை நம்பி ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டரை கொடுத்து ஏமாந்ததை அமீன் கான் உணர்ந்துள்ளார் இது குறித்து பெரிய கடை காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : விபத்தை ஏற்படுத்திய காவலர்..! போராட்டத்தில் இறங்கிய உறவினர்கள்..!!