நிலவு எப்படி உருவானது என்பதை இஸ்ரோவின் சந்திரயான் திட்டம் கண்டறிந்துள்ளது. அமெரிக்கா ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் நிலவு உருவாக்கம் குறித்து வெவ்வேறு கருத்துகளை தெரிவிக்கும் நிலையில், நிலவின் தென் துருவத்தில் இஸ்ரோ மேற்கொண்ட ஆராய்ச்சியில் நிலவின் தோற்றத்திற்கான ரகசியம் குறித்து இந்திய விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் வெளிப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 23 இந்தியர்களை சர்வதேச அறிவியல் அரங்கில் வேறு கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்கிய நாள், அதுவரை யாரும் சென்றிடாத நிலவின் தென் துருவ பகுதி அருகே விக்ரம் லேண்டர் தரை இறங்கிய பிறகு இரண்டு மணி நேரத்தில் பிரக்யா ரோவரும் ஆறு சக்கரங்களுடன் நிலவின் மண் பரப்பில் உருள தொடங்கியது. இது தொடர்ந்து 14 நாட்கள் செயல்பட்ட லாண்டரும் ரோவரும் தங்களது பணிகளை சிறப்பாக செய்துவிட்டு நீண்ட உறக்கத்திற்கு சென்றதாக இஸ்ரோ அப்போது தெரிவித்திருந்தது.
நிலவின் தரை இறங்கியது மட்டும் சாதனை என நினைத்த பலருக்கும் சந்திரயான் திட்டம் செயல்பட்ட 14 நாட்களுக்குள் பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. ரோவரின் முன் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ஏபிஎஸ் எனப்படும் அறிவியல் ஆய்வு கருவி ரோவர் பயணித்த பாதையில் 23 இடங்களில் மண் பரிசோதனை மேற்கொண்டது. மேலும், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் நிலவின் மற்ற பகுதிகளில் உள்ள மண் துகள்களை ஆய்வு செய்த நிலையில், தென்பகுதியில் உள்ள மண் படிமங்களில் பல வேறுபாடுகளை இஸ்ரோ கண்டறிந்துள்ளது. சிலிக்கான், அலுமினியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு ஆகியவை மண்ணில் மேற்பரப்பில் அதிகம் இருந்ததாக கூறுகின்றனர்.
இந்நிலையில், அதன் மூலம் நிலவின் ஆரம்ப காலம் குறித்த கருத்து உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார். இந்த அறிவியல் ஆய்வு கருவியை கண்டறிந்த விஞ்ஞானி சண்முகம், நிலவின் தோற்றம் என்பது லூனார் மேக்மா ஓசன் என்கிற கருத்துக்களின் படி தான் என்பது சந்திரயான் தரவுகளில் தெரிய வந்திருக்கிறது. இதன் மூலமாக பூமி உருவாகி பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பூமியின் ஒரு பாகத்தில் இருந்து உடைந்து நிலா உருவாகியுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக நிலவின் தென் பகுதியில் 420 கோடி வருடங்களுக்கு முன்பு மிகப்பெரிய விண்கற்கள் தாக்கியதாகவும் இதனால் அதிகப்படியான பள்ளங்கள் அங்கு உருவானதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதில், மற்ற பகுதிகளை விட மக்னீசியம் அதிகமாக இருப்பதற்கு விண்கற்களின் மோதியது தான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், எங்களுடைய ஆராய்ச்சி இது மட்டுமல்லாது சந்திரயான் ஒன்று மற்றும் இரண்டு திட்டங்களில் மேற்பரப்பிலிருந்து மண் பரிசோதனை மேற்கொண்ட அறிவியல் ஆய்வு கருவிகளின் துல்லிய தன்மையையும் தரம் மதிப்பீடு செய்ய முடியும் என கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.
Read More : நோயை குணப்படுத்தும் மருத்துவமனையில் நோய் தொற்று ஏற்படுத்தும் அபாயம்..! குப்பை கிடங்காக மாறிய மருத்துவமனை..!!