நேபாளத்தில் 40 பயணிகள் சென்ற பேருந்து எதிர்பாராத விதமாக ஆற்றில் கவிழ்ந்ததில் 14 இந்தியர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநில பதிவெண் கொண்ட பேருந்து ஒன்று, 40 பேருடன் நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் உள்ள மர்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக நேபாள போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தனாஹூன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீப்குமார் ராயா கூறுகையில், ”UP FT 7623” என்ற பதிவெண் கொண்ட பேருந்து ஆற்றில் விழுந்து கரையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
போக்ஹாரவில் இருந்து காத்மாண்டு சென்று கொண்டிருந்த பேருந்து, திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது. தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன’ என்று தெரிவித்தார். போகாராவில் இருந்து நேபாள தலைநகரான காத்மாண்டுவுக்கு செல்லும் போது இந்த பேருந்து விபத்தில் சிக்கிக் கொண்டதாக நேபாள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தியர்கள் பலர் இந்த பேருந்தில் பயணம் செய்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Read More : சிக்கலில் மாட்டிக் கொண்ட தவெக..!! விஜய் மீது பரபரப்பு புகார்..!! பாயுமா வழக்கு..?