பாராசிட்டமால் உள்ளிட்ட 156 மருந்து வகைகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.

காய்ச்சல், தலைவலி மற்றும் உடம்பில் ஏற்படும் வலி ஆகியவற்றிற்காக பயன்படுத்தப்படும் பாராசிட்டமால் மாத்திரைகள் உள்பட 156 மருந்து வகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பதால், மத்திய அரசு தடை செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், பிரபல நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பிரபல மருந்தான Aceclofenac 50mg+paracetamol 125mg மாத்திரையை தடை செய்துள்ளது. இதேபோல், பாராசிட்டாமல் வகையை சேர்ந்த 156 மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

குறிப்பு : மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த மருந்தையும் உட்கொள்ளக் கூடாது. மருத்துவர்களே உடலை ஆராய்ந்து எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் கூறுவார்கள். பாராசிட்டமால் மாத்திரையை அளவுக்கதிகமாக உட்கொள்வதன் விளைவாக கல்லீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Read More : கிருஷ்ணகிரி பள்ளி மாணவி வழக்கில் திடீர் திருப்பம்..!! கைதான சிவராமனுக்கு என்ன ஆச்சு..?