நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை அறிவித்தார். கட்சியின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடைபெறவுள்ளதாகவும், அதற்கு முன்னரே கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்வார் என்றும் கூறப்பட்டது. இதற்கிடையே, தவெக கொடியில் இடம்பெறவுள்ள நிறங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், விஜய் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், நாளை முதல் நாடெங்கும் கொடி பறக்கும் என அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப்போகும் வீரக் கொடியை, வெற்றிக் கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் காலை 9.15 மணியளவில் அறிமுகப்படுத்தி, கொடிப் பாடலை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Read More : சமோசா, பிரியாணி சாப்பிட்ட மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்..!! 80-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி..!! நடந்தது என்ன..?