இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரை மற்றும் உப்பில் பிளாஸ்டிக் நுண் துகள்கள் கலந்திருப்பதாக ஆய்வுகள் தெரியவந்துள்ளது. மனித குலத்தில் மிகப்பெரிய எதிரியாக பல வியாதிகளுக்கு உண்டாக்கும் பிளாஸ்டிக் தற்போது அன்றாட மக்கள் பயன்படுத்தும் உப்பு மற்றும் சர்க்கரைகளில் இருக்கிறது என சில ஆய்வுகள் கூறுகிறது. அந்தவகையில், டெல்லியை டாக்ஸிஸ் லிங்க் என்ற அமைப்பு இந்தியாவில் உள்ள முன்னணி நிறுவனங்களின் அயோடிட் உப்பு மற்றும் சர்க்கரையை ஆய்வு செய்தது இதில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்த மைக்ரோ பிளாஸ்டிக் அளவு 0.5 மில்லி மீட்டர் முதல் 5 மில்லி மீட்டர் வரை இருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மைக்ரோ பிளாஸ்டிக் மிக அதிக அளவு அயோடிட் உப்புகளில் இருப்பதும் இது பல வண்ணங்களிலும் பல கோணங்களிலும்இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகிறது . இந்த துகள்கள் பெரும்பாலும் தண்ணீரால் தான் கலந்திருக்கும் என கூறப்படுகிறது.

இதற்கு பிளாஸ்டிக் தயாரிப்பு தொழிற்சாலை மனித நேயத்தோடு செயல்பட வேண்டும் எனவும் அரசு கண்காணிப்பு பணியை தீவிர படுத்த வேண்டும் தங்கள் முழுமையாக பரிசோதனை செய்த பிறகு அரசு சான்றிதழ் வழங்க வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும், இது போன்ற உணவுப் பொருட்களில் பிளாஸ்டிக் நுன்துகள்கள் ஊடுருவியதின் விளைவு புற்றுநோய், மலட்டு தன்மை உள்ளிட்ட பாதிப்புகள் வரை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Read More : வலி தெரியாமல் இருக்க வலி நிவாரணி மாத்திரைகள்..!! தவறாக பயன்படுத்தும் தொழிலாளிகள்..!! எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!