சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த கோவிந்தகவுண்டனுர் பகுதியைச் சேர்ந்த கணேசன்-சாந்தி தம்பதி. இவர்களது வீட்டிற்கு அருகே பழனிவேல் சரசு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சாந்திக்கு பக்கத்து வீட்டுக்காரரான பழனிவேல் என்பவரோடு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் பழனிவேலின் மனைவியான சரசுக்கு தெரியவந்தது. இதையடுத்து, பழனிவேலுவிற்க்கும் சரசுவுக்கு தகராறு ஏற்ப்பட்டுள்ளது.
இதுகுறித்து சரசு தனது உறவினர்களுக்கு தெரிவித்துள்ளார். கடந்த 14ஆம் தேதி என்று மேச்சேரி பகுதியை சேர்ந்த சரசுவின் உறவினர்கள் சாந்தியின் வீட்டிற்கு சென்று 2 பெண்கள் வாசலில் நின்று கூச்சல் விட, சாந்தியும் அவரது கணவர் கணேசனும் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளனர். மேலும், சரசுவுடன் வந்த இரண்டு பெண்களும் சாந்தியை தாக்க முயன்ற போது கணவர் கணேசன் தடுக்க முயன்றார். அப்போது, அந்த 2 பெண்களையும் கணேசன் தாக்கியுள்ளார்.
இதையடுத்து, கணேசனை மடக்கிய 2 பெண்களும் அவரை வெளியே இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அங்கு வந்த சரசுவின் உறவினர்கள் வீட்டுக்குள் சென்று சாந்தியையும் அவரது கணேசனையும் கொடூரமாக தாக்கியுள்ளனர். இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும், ஒருவர் அங்கிருந்து சிசிடிவி கேமராக்களை குச்சிகளை வைத்து உடைத்த காட்சியும் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : கடன் வாங்க நண்பனை அழைத்து சென்ற நண்பர்…!! இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி..?