தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு குறைந்த விலையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், அரசின் நலத்திட்டங்கள், நிவாரண உதவிகள் போன்றவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான், ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அதற்கான பணியும் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ”தமிழக ரேஷன் கடைகளில் சிறு தானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். வெளிமாநிலங்களில் இருந்து கேழ்வரகு கொள்முதல் செய்யப்படுவதாக கூறிய அவர், அனைத்து ரேஷன் கடைகளிலும் தட்டுப்பாடின்றி பாமாயில் வழங்கப்படுவதாக தெரிவித்தார். மேலும், ரேஷன் கடைகளுக்கு ஒரே கிழமையில் வார விடுமுறை அளிப்பது குறித்தும் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தென்னை விவசாயிகளிடம் இருந்து தேங்காயை கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டுமென நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்தும் அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
Read More : இலவச மின்சாரத்தில் முறைகேடு..!! சிக்கப்போகும் விவசாயிகள்..!! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!!