1. இன்று நிறைவேறுகிறது 65 ஆண்டு கால கோரிக்கையான அத்திக்கடவு-அவிநாசி திட்டம். காணொலி வாயிலாக திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

2. கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு தொடரும் போராட்டம். தமிழ்நாடு, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில் மருத்துவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி.

3. இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறது இந்திய மருத்துவ சங்கம். அத்தியாவசிய சேவைகள் இயங்கும் என்றும் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படாது என அறிவிப்பு

4. நாடு தழுவிய போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் ஆதரவு. காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படாது என அறிவிப்பு

5. டிஎன்பிஎஸ்சி-யின் ஆண்டு அட்டவணையில் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு தேதி மாற்றத்தால் குழப்பம். ஏற்கனவே அறிவித்தபடி செப்டம்பர் 14ஆம் தேதியை நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம்.

6. பாரிஸில் இருந்து இன்று தாயகம் திரும்புகிறார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். ஒலிம்பிக் பதக்க கனவு தகர்ந்தாலும் மக்களின் மனங்களை வென்றவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திட்டம்.

7. மீண்டும் மல்யுத்த களத்தில் இறங்குவேனா என்பதை தற்போது கூற முடியாது. எது சரியோ அதற்காக தொடர்ந்து போராடுவேன் என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உறுதி.

8. ஜம்மு-காஷ்மீரில் செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 தேதிகளில் 3 கட்டமாக சட்டமன்றத் தேர்தல். ஹரியானாவில் ஒரே கட்டமாக அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிப்பு.

9. 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு. சிறந்த தமிழ் திரைப்படம், பின்னணி இசை உள்பட நான்கு பிரிவுகளை விருதுகளை குவித்த பொன்னியின் செல்வன்.

10. சிறந்த நடிகராக காந்தாரா ரிஷப் செட்டியும், சிறந்த நடிகையாக திருச்சிற்றம்பலம் நடிகை நித்யா மேனனும் தேர்வு. கே.ஜி.எஃப் படத்தின் சண்டைக் காட்சிக்காக அன்பறிவு சகோதரர்களுக்கும், மேகம் கருக்குதா பாடலுக்கு சிறந்த நடனத்திற்கான தேசிய விருதும் அறிவிப்பு.