சென்னையே அழியப்போகிறது என ஆண்டுக்கு ஒருமுறை தகவல்கள் பரவி வந்த நிலையில், மதியரசன் என்சிசி ஆய்வு அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
Chennai | சென்னையை நம்பினோர் கைவிடப்படார் என்ற நம்பிக்கையை கொடுத்த நகரம் இன்னும் கொஞ்ச காலங்களில் இயற்கையால் இல்லாமல் போகப் போகிறது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா. ஆனால் இந்த முறை மத்திய அரசின் என்சிசிஆர் என அறியப்படும் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வில், தமிழகத்தில் மட்டும் 422 கிலோமீட்டர் தூரம் வரை மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதேபோல மண்ணரிப்பு, பருவநிலை மாற்றம் புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால் கடலின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் தமிழகத்தில் சென்னை, திருவாரூர், நாகப்பட்டினம், செங்கல்பட்டு, ஆகிய பகுதிகளில் கடலின் நீர்மட்டம் 2050 ஆம் ஆண்டிற்குள் சுமார் 20 சென்டிமீட்டர் அளவிற்கு உயரலாம் என கூறப்படுகிறது.
குறிப்பாக சென்னையில் 2,100 ஆம் ஆண்டில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும் என உலகளாவிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது கடலின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே சென்றால் சென்னை, மெரினாவில் உள்ள கடல் நீர் பெரம்பூர் பகுதி வரை கூவம் ஆறு மூலமும் வாய்க்கால்கள் வழியாகவும் செல்லும் நிலை ஏற்ப்படும் இதனால் சென்னைகள் நிலத்தடி நீர் எல்லாமே கடல் நீராக மாறும் என எச்சரித்து உள்ளனர்.
இப்படி நிலத்தடி நீர் உப்பாக மாறும்போது கட்டுமான பணிகள் விவசாயம் போன்றவற்றிற்கு நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாமல் போகும் அபாயம் உள்ளது அது மட்டும் இல்லாமல் 20 ஆண்டுகளுக்கு முன்பு சுத்தமான நிலத்தடி நீரை கொண்டிருந்த சென்னை ஈசிஆரில் தற்போது உப்பு தண்ணீராக மாறி வருவதையும் நம்மால் பார்க்கமுடிகிறது. மேலும், சென்னை சாந்தம் பகுதியில் நிலத்தடி நீர் உப்பு தண்ணீராக மாறி வருவதாகவும் கூறும் விஞ்ஞானிகள், இதிலிருந்து தப்பிக்க பருவநிலை மாற்றத்தை தடுப்பதோடு சூழலுக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொள்வதே ஒரே வழி என்கின்றனர். அதே வேளையில் சென்னையை இந்த ஆபத்திலிருந்து மீட்க மத்திய மாநில அரசுகள் மனம் வைத்தால் மட்டும் நடக்காது என கூறும் ஆய்வாளர்கள் இது உலகளாவிய பிரச்சனை என்பதால், உலகளவில் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
Read More : எனக்கு கொலை மிரட்டல் விடுக்க சொன்னதே சீமான் தான்..? திருச்சி எஸ்பி பரபரப்பு புகார்..!!