நாடு முழுவதும் 78-வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15ஆம் தேதியான இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் 11-வது முறையாக பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றினார். அதேபோல், சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் கொடி ஏற்றி வைத்தார். இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
அந்தவகையில், சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வெள்ளரி வெள்ளி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இன்று சுதந்திர தின விழாவையொட்டி முன்னிட்டு பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் தட்சிணாமூர்த்தி தேசியக் கொடி ஏற்றி வைத்தார். இந்த விழாவில் தலைமை ஆசிரியர் செந்தில் குமார், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்தாண்டு 6-12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக, அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் சுந்தர்ராஜ் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
அதேபோல், சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் வெள்ளரி வெள்ளியை அடுத்த ஊமையக்கவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் அருள்தாஸ் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து, மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப் போட்டியில் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு திருக்குறள் மற்றும் பாரதியார் கவிதை புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.
Read More : அச்சுறுத்தும் குரங்கு அம்மை நோய்..!! அறிகுறிகள் என்ன..? சர்வதேச சுகாதார அவசர நிலையை அறிவித்தது WHO..!!