BREAKING | திருவண்ணாமலை மாவட்டம் கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜ்குமாரின் இரண்டாவது மகள் காவ்யாஸ்ரீ (வயது 5). இவர், அங்குள்ள தொடக்க பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில், காவ்யாஸ்ரீ அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் 10 ரூபாய் குளிர்பானம் வாங்கி குடித்துள்ளார். அதை குடித்த சிறிது நேரத்திலேயே சிறுமி மூச்சுத்திணறல் ஏற்பட்டு வாய், மூக்கு வழியாக நுரை தள்ளி மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து, பதறிப்போன பெற்றோர், உடனடியாக சிறுமி மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் தற்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தான், உணவு பாதுகாப்புத்துறை ஒரு அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, தமிழ்நாடு முழுவதும் உள்ள குளிர்பான ஆலைகள், கடைகளில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. காலாவதியான குளிர்பானங்கள் விற்கப்பட்டால் கடை மற்றும் ஆலையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.