காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால், கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, கர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளின் உபரி நீர் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து காணப்படுகிறது.

நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 6,548 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 20,505 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால், நேற்று காலை 119.24 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 119.65 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 92.91 டிஎம்சியாக உள்ளது.