மகளிர் உரிமைத்தொகை திட்டம் பெண்களின் அமோக ஆதரவை பெற்றுள்ள நிலையில், தற்போது மற்றொரு மகிழ்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், ”தமிழ்நாட்டில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மேலும், தகுதி வாய்ந்த அனைவருக்கும் இந்த தொகை சென்று சேரும் என்பதால், விடுபட்டவர்கள் மேல்முறையீடு செய்யவும் தமிழக அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது” என்றார்.

அப்போது செய்தியாளர்கள், “பெண்களுக்கு 1,000 ரூபாய் வழங்குவது போன்று ஆண்களுக்கும் வழங்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், “திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய் உரிமைத் தொகையினை தமிழக அரசு வழங்கி வருகிறது. அந்த உரிமைத் தொகை தங்களுக்கு இல்லையே என்ற ஆண்களின் ஏக்கத்தை தீர்த்து வைக்கும் சூழ்நிலை எதிர்காலத்தில் வரும்” என்றார்.

Read More : 3 விதமான கட்சிக் கொடிகள் ரெடி..!! முடிவு எடுக்கப்போகும் விஜய்..!! மாநாட்டில் வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்..!!