Mettur Dam | மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்ததை அடுத்து, அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு இன்று காலை 8 மணி முதல் வினாடிக்கு 50,000 கனஅடியில் இருந்து வினாடிக்கு 26,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.
நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,500 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 4,500 கன அடி நீரும் திறக்கப்படுகிறது. அதேபோல் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியில் நீடிக்கும் நிலையில், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.
Read More : செம குட் நியூஸ்..!! பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!! சேலம் ஆட்சியர் அறிவிப்பு..!!