தற்போதைய காலகட்டத்தில் செயலற்ற வாழ்க்கைமுறை மற்றும் தவறான உணவு பழக்கங்களால் பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆரோக்கியம் நமது உணவைப் பொறுத்தது என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. நமது ஆரோக்கியத்தில் நமது உணவு 80 சதவிகிதப் பங்கு வகிக்கிறது. எனவே, தற்போது இருக்கும் சூழலில் நாம் அன்றாடம் உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் உள்ளது. குறிப்பாக உலகம் முழுவதும் மாரடைப்பு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அவற்றில் பெரும்பாலானவை மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையை முக்கிய காரணமாக உள்ளது.
நம் உணவு முறையில் செய்யும் சிறிய தவறுகள் சில சமயங்களில் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..? ஆம், உண்மைதான். இதய நோயாளிகள், கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் உணவுகளை விட்டு விலகி இருப்பது நல்லது. அந்தவகையில், இதய நோயாளிகளின் ஆபத்தை அதிகரிக்கும் உணவுகள் பற்றி பார்க்கலாம்.
மாவில் செய்யப்பட்ட பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது அதிக கலோரிகளுடன், கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் இரண்டையும் அதிகரிக்கிறது. இதனால், மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மாவில் செய்யப்பட்ட பொருட்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. மேலும், முட்டையின் மஞ்சள் கருவில் அதிக அளவு கொழுப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. எனவே, இதய நோயாளிகள் குறைந்த அளவு முட்டையின் மஞ்சள் கருவை உட்கொள்ள வேண்டும்.
அதேபோல், அதிக அளவு காஃபி உட்கொள்வது இதய நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். காபியில் உள்ள காஃபின் இதயத் துடிப்பை துரிதப்படுத்தி இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதய நோயாளிகள் பழச்சாறுகளில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கலோரிகள் இருப்பதால் இது இதயத்திற்கு நல்லதல்ல. எனவே, இதய நோயாளிகள் பழச்சாறுகளுக்கு பதிலாக பழங்களை அப்படியே சாப்பிடுவது நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Read More : ”இப்பவும் ஒன்னும் கெட்டு போகல”..!! தமிழ்நாட்டை 3 மாநிலங்களாக பிரித்தால் ரூ.45,000 கோடி பெற்றுத் தருவோம்..!!