ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்புக்குரியதாகும். அந்த வகையில், வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து திதி கொடுப்பது வழக்கம். இதற்காக ராமேஸ்வரத்தில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள். இதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். சிறப்பு பேருந்து, ரயில்கள் இயக்கப்படும். இந்நிலையில், இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் ராமேஸ்வரத்தில் குவிந்துள்ளனர்.
இன்று ஆடி அமாவாசை தினத்தை ஒட்டி, பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், அதிகாலை முதல் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடிவிட்டு, மறைந்த முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து திதி கொடுத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினர். ஆடி அமாவாசையையொட்டி லட்சக்கணக்கான மக்கள் ராமேஸ்வரத்தில் குவிந்துள்ள காரணத்தால், எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
Read More : தமிழ்நாட்டில் 1,369 பேருக்கு எலி காய்ச்சல்..!! எப்படி பரவுகிறது..? சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்..!!