இன்று அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அரசு விடுமுறை தினங்கள் மற்றும் பொது விடுமுறைகளை தவிர்த்து உள்ளூர் பண்டிகைகள், திருவிழாக்கள் அடிப்படையில் அந்தந்த மாவட்டத்தின் ஆட்சியர்கள் விடுமுறைகளை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில், இன்று (ஆகஸ்ட் 2) மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாளையொட்டி, அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அரியலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் செயல்படாது. அதைப் போலவே இன்று அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் வரும் 17ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Read More : Ration | ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு..!! துவரம் பருப்பு, பாமாயில்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!