FASTag | தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் அனைத்தும் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த வேண்டும். சாலைகள் பராமரிப்பு போன்ற காரணங்களுக்கான இந்த கட்டணம், அனைத்து வாகன ஓட்டிகளிடமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் செலுத்தும் போது டோல் கேட்களில் இருக்க்கும் நெரிசலை தவிர்க்கும் விதமாக ஃபாஸ்டேக் உருவாக்கப்பட்டது. ஃபாஸ்டேக் இல்லாமல் பயணித்தால் இரு மடங்கு சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும். எனவே, சுங்கச் சாவடிகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்டாக் ஆக்டிவாக இருப்பது அவசியம்.

இந்நிலையில் தான், ஆகஸ்ட் 1ஆம் தேதியான இன்று முதல் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, 5 ஆண்டுகள் பழமையான ஃபாஸ்டாக்குகளை மாற்ற வேண்டும் வேண்டும் என்றும் KYC புதுப்பிப்பு, வாகன பதிவு எண் மற்றும் சேஸ் எண்ணை ஃபாஸ்டாக்குடன் இணைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய வாகனம் வாங்கியவர்கள் 90 நாட்களுக்குள் ஃபாஸ்டேக் அப்டேட் செய்யப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் ஃபாஸ்டாக்குடன் மொபைல் எண்ணை இணைத்தல், அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் கேஒய்சியை நிறைவு செய்தல் போன்றவற்றை செய்து முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Read More : Annamalai | ”இனி செத்தாலும் விமான நிலையத்தில் பேச மாட்டேன்”..!! பரபரப்புக்கு மத்தியில் டெல்லி புறப்பட்டுச் சென்றார் அண்ணாமலை..!!