பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், நீலகிரி போலீசார் கோவையிலிருந்து சென்னைக்கு வழக்கு ஒன்றில் ஆஜர் படுத்துவதற்காக, சேலம் மாவட்டம் ஆத்தூர் வழியாக அழைத்து சென்றனர். அப்போது சவுக்கு சங்கருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயிற்று மற்றும் ஏற்பட்டதாக கூறி மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊட்டி சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் அளித்த புகார் பேரில் சென்னையிலிருந்து 29-ம் தேதி விசாரனைக்கு அழைத்து சென்ற நிலையில் ஊட்டி ஜே.எம். 1 நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மீண்டும் சென்னைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து சைபர் கிரைம் ஆய்வாளர் தலைமையில் 17 போலீஸார் அழைத்து வந்தபோது சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே திடீரென நெஞ்சுவலிப்பதாக கூறி வேனில் மயக்கமடைந்துள்ளார். உடனடியாக அவரை ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நோயாளிகளை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இதையறிந்த செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க சென்றவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த நீலகிரி போலீசார் செய்தி சேகரிக்க அனுமதிக்கவில்லை இதனை தொடர்ந்து ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்திருந்த பொது மக்களை அங்கிருந்து வெளியேற்றியதால் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் நீண்ட நேரம் வெளியில் காத்திருந்தனர். இரண்டு மணி நேர சிகிச்சைக்கு பின் மீண்டும் காவல்துறை வேனில் ஏறுவதற்காக சவுக்கு சங்கர் வந்தார். அப்போது வேனில் இருந்தபடியே என் கைதுக்கு உதயநிதி தான் காரணம், உதயநிதி உத்தரவின்பேரில், என் மீது மீண்டும் மீண்டும் பொய் வழக்கு போட்டு கைது செய்து வருகின்றனர் என்று கூறினார்.