ஆதார் என்பது முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. அரசு சேவைகள், வங்கி, தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் பலவற்றிற்கும் ஆதார் எண் பயன்படுகிறது. ஒருவர் ஆதார் நம்பரை வழங்கும்போது செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
செய்ய வேண்டியவை :
* உங்கள் ஆதாரை கேட்கக்கூடிய நிறுவனமோ அல்லது தனி நபரோ அதற்கான சரியான காரணத்தையும், உங்களுடைய சம்மதத்தையும் பெற வேண்டும்.
* ஒருவேளை ஆதார் நம்பரை பகிர்வதில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால், ஒரு வெர்ச்சுவல் ஐடென்டிஃபையரை (Virtual Identifier – VID) உருவாக்கிக் கொள்ளலாம்.
* UIDAI வெப்சைட் அல்லது m-Aadhaar அப்ளிகேஷனில் கடந்த 6 மாதங்களுக்கான உங்களுடைய ஆதார் ஹிஸ்டிரியை தெரிந்து கொள்ளலாம்.
* ஒவ்வொரு ஆதன்டிகேஷன் செயல்முறையையும் UIDAI உங்களுக்கு இ-மெயில் மூலமாக தெரியப்படுத்தும். ஆகையால், இ-மெயில் ஐடியை உங்களது ஆதாருடன் இணைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
* உங்களது பயன்பாட்டில் உள்ள மொபைல் நம்பரையும் ஆதாருடன் தவறாமல் இணைத்து வைக்கவும். ஆதார் லாக்கிங் மற்றும் பயோமெட்ரிக் லாக்கிங் போன்ற வசதியையும் UIDAI வழங்குகிறது.
* ஆதாரை பயன்படுத்தாத சமயத்தில் அதனை பூட்டி வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது உடனடியாக அதனை அன்லாக் செய்து கொள்ளலாம்.
* ஒருவேளை உங்களது ஆதார் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதாக தோன்றினால், 1947 என்ற ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இது 24*7 மணி நேர இலவச அழைப்பு. அல்லது help@uidai.gov.in என்ற இ-மெயில் ஐடியை தொடர்பு கொள்ளலாம்.
செய்யக்கூடாதவை :
* உங்களுடைய ஆதார் லெட்டர் / பிவிசி கார்டு அல்லது அதன் நகலை தவறுதலாக எங்கும் வைத்து விட வேண்டாம்.
* பொது தளங்களில் உங்களது ஆதாரை ஷேர் செய்ய வேண்டாம். குறிப்பாக ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் மீடியாக்களில் பகிரவே கூடாது.
* அதிகாரப்பூர்வமற்ற எந்த ஒரு நிறுவனத்திடமும் உங்களது ஆதார் ஓடிபி-யை பகிரக் கூடாது.
* உங்களுடைய m-Aadhaar PIN-ஐ யாரிடமும் சொல்லக்கூடாது.