மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதை ஒட்டி 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Mettur Dam | காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியுள்ளன. இதனால், அணைகளின் பாதுகாப்பு கருதி தொடர்ந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், இன்று இரவுக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதை ஒட்டி 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களுக்கும், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கரையோரம் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்களின் பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எப்போது வேண்டுமானாலும் 16 கண் பாலம் வழியாக உபரி நீர் திறந்து விடப்படலாம் என்ற நிலையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால், விரைவில் முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More : நடிகர் விஜய் அழைத்தால் கட்சியில் இணைய தயார்..!! பிரபல இயக்குனர் அறிவிப்பு..!!