Mettur Dam | காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளின் உபரி நீர் வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இன்று (ஜூலை 29) காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.10 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 85.56 டிஎம்சி-யாக அதிகரித்துள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 12,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கான நீர்வரத்து 1.52 லட்சம் கன அடியில் இருந்து 1.55 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.