3 வகையான மதுபானங்களைத் திரும்பப் பெறுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Tasmac | மதுபானங்களில் வரையறுக்கப்பட்ட அளவு ஆல்கஹால் இருந்தால் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இல்லையென்றால், அந்த மதுவை விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சராசரியாக குறிப்பிட்ட மதுபானங்களில் ஆல்கஹால் (எத்தனால்) அளவு 48.2 சதவிகிதமாகவும், கலவையில் 50% எடையாகவும் இருக்க வேண்டும். ஆனால், ஒரு சில மதுபானங்களில் வரையறுக்கப்பட்ட அளவைவிட ஆல்கஹால் குறைவாகவும், சிலவற்றில் அதிகமாகவும் இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, டிராபிகானா விஎஸ்ஓபி பிராந்தி, ஓல்ட் சீக்ரெட் பிராந்தி மற்றும் வீரன் ஸ்பெஷல் பிராந்திகளில் ஆல்கஹால் வரையறுக்கப்பட்ட அளவு இல்லாதது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்த மூன்று வகையான மதுபானங்களையும் விற்க வேண்டாம் என்றும், அவற்றை திருப்பி அனுப்புமாறும், டாஸ்மாக் கடைகளுக்கு சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, இவை நுகர்வுக்கு தகுதியற்றவை என்று கூறி, திரும்பப் பெறப்பட்டுள்ளன.
Read More : Mettur Dam | மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு..!! நீர்மட்டம் 107.69 அடியாக உயர்வு..!!