TVK Vijay | 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதில் இருந்தே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளை கழட்டிவிட்ட அதிமுக என இரண்டையும் சமாளிக்கும் வகையில் திமுக-வின் பிரச்சாரம் இருக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த முறையும் ஆட்சியில் அமர முடியும். ஆனால், திமுக அடுத்த முறை ஆட்சிக்கு வருவதே சந்தேகம் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏனென்றால், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி விஜய்யும் ஆளும் கட்சியை தற்போதில் இருந்து எதிர்த்து வருகிறார். இதனால் அவர், கட்டாயம் திமுகவுடன் இணைய வாய்ப்பே இல்லை. இவர்களை சமாளிக்க வேண்டுமென்றால் அரசியல் களப்பணிகளை மிக நேர்த்தியாக செய்ய வேண்டும். இதற்காக பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை திமுக நாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இவர் தற்போது, நடந்து முடிந்த ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் உதவி புரிந்து சந்திரபாபு நாயுடு வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தார் என பல தகவல்கள் வெளியானது. மேலும், தேர்தல் வியூகம் அமைக்கும் பிரசாந்த் கிஷோர், விஜய் தன்னிடம் வந்து உதவி கேட்டால் நான் செய்ய தயாராக உள்ளேன் என கூறியுள்ளார். ஆனால், தவெக தற்பொழுது வரை இதுகுறித்து வாய் திறக்கவில்லை. இந்நிலையில், பிரசாந்த் கிஷோர், ”யார் என்னிடம் வந்தாலும் அவர்களுக்குரிய உதவியை செய்வேன். ஆனால், முழுமையாக அவர்கள் கட்சியில் ஈடுபடமாட்டேன். அது விஜய்யாக இருந்தாலும் சரி” என கூறியுள்ளார்.