அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு மனு தாக்கல் செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கோரினார்.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்தும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தனர். இந்த வழக்கில், முன்னதாக இணை ஒருங்கிணைப்பாளர் என பதில் மனு தாக்கல் செய்த எடப்பாடி பழனிசாமி, பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, அதிமுக பொதுச்செயலாளர் என எப்படி குறிப்பிட முடியும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அந்த பதவி தொடர்பான மனு நிலுவையில் உள்ள நிலையில், எப்படி பதவியை கூற முடியும் என நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியது. இதையடுத்து, தங்களது தவறுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியது. இதையடுத்து, திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Read More : ”இனி அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயரை பயன்படுத்தக்கூடாது”..!! உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு..!!