வாழ்க்கையில் நாம் முன்னேற நினைத்து ஒவ்வொரு அடியையும் வெற்றிகரமாக எடுத்து வைப்போம். ஆனால், நாம் முயற்சி செய்யும்பொழுது நமக்கு தடையாக நம் வளர்ச்சியை தடுக்கும் விதமாக 5 வில்லன்கள் இருக்கிறார்கள். அதுகுறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஊக்கமின்மை :
நீங்கள் செய்கிற எதையும் மேலோட்டமாகப் பார்க்க வேண்டாம். ஆழ்ந்து யோசித்து அதன் உண்மையான நோக்கத்தை உள்ளே பதிய வைத்துக் கொள்ளுங்கள். எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்த்து விடுங்கள்.
பிரச்சனைகள் :
பிரச்சனைகள் நிகழ்ந்தே தீரும். தயாராக இருங்கள். அவற்றை எப்படி எதிர்கொள்ளலாம் என்பதை யோசியுங்கள். ஒன்று அல்ல, மூன்று தீர்வுகளைச் சிந்தித்து வையுங்கள். அத்தனைப் பிரச்சனைகளுக்கு உள்ளே ஒரு புதிய வாய்ப்பு ஒளிந்து இருக்கும். அதை தேடிப்பிடித்து பயன்படுத்துங்கள்.
பயம் :
பயம் இல்லாதது போல் நடிக்காதீர்கள். எனக்கு இதை நினைத்து பயமாக இருக்கிறது என்று ஒப்புக் கொள்பவன் கோழை அல்ல. பயத்தை ஏற்றுக் கொள்கிறவனால்தான் அந்தப் பயத்தை வெல்ல முடியும். உங்கள் பயத்தின் தொடக்கப்புள்ளி எது என்று யோசியுங்கள்.
மாற்றம் :
நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். முரண்டு பிடிக்காதீர்கள். மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் இல்லை. இதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
தோல்வி :
சறுக்கல்கள் வரும்போது, மாத்தி யோசியுங்கள். இந்தத் தோல்வியும் ஒரு வெற்றியாக இருக்கலாம். சில செயல்களை நம்மால் கட்டுப்படுத்த முடியும். மற்ற பல செயல்கள் நம் கையில் இல்லை. நம்மால் முடிந்ததை மட்டும் தொடுங்கள், சரி செய்யுங்கள்.
மேற்குறிப்பிட்ட 5 வில்லன்களை சாதுரியமாகக் கையாண்டால் வாழ்க்கைப் பயணம் இனிதே நடைபெறும். வாழ்க்கையில் வெற்றி அடையலாம்.
Read More : பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் உங்களுக்கும் வீடு வேண்டுமா..? இதை செய்தாலே போதும்..!!