வாட்ஸ்அப் மூலம் உங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம். அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இதுகுறித்து கிளியர் டேக்ஸின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. அர்ச்சித் குப்தா கூறுகையில், “நாங்கள் வருமான வரி தாக்கல் செய்வதை எளிமையாக்கவில்லை. நிதி அதிகாரத்தை ஜனநாயகப்படுத்துகிறோம். வாட்ஸ் அப்பில் இந்த சேவையை அறிமுகப்படுத்துவதன் மூலம் தொழில்நுட்பத் தடைகளை நீக்கியுள்ளோம். இதன் மூலம் மில்லியன் கணக்கான கடின உழைப்பாளிகள், தங்கள் செல்போன்களில் ஒரு சில டச்கள் மூலம் தங்கள் உரிமையைத் திரும்பப் பெற முடியும்” என்று கூறியுள்ளார்.
ஐடிஆர்-1 படிவம் :
ரூ.50 லட்சம் வரையிலான வருமானம் உள்ள தனிநபர் இதை தாக்கல் செய்யலாம். இதில் சம்பளம் அல்லது ஓய்வூதியம், ஒரே ஒரு வீட்டுச் சொத்தின் உரிமையுடன் சம்பளம் வாங்கும் நபர் அல்லது வங்கிக் கணக்கில் இருந்து வட்டி போன்ற பிற ஆதாரங்களில் (பந்தயம், சூதாட்டம் மற்றும் லாட்டரிகளைத் தவிர்த்து) இருந்து கிடைக்கும் வருமானம் ஆகியவற்றை நீங்கள் கணக்கில் காட்டப்பட வேண்டும்.
ஐடிஆர்-4 படிவம் :
சிறிய மற்றும் நடுத்தர வரி செலுத்துவோர் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தும் எளிய வரி தாக்கல் படிவமாகும். இதை தனிநபர்கள், HUF நிறுவனங்களும் பயன்படுத்தலாம்.
வாட்ஸ்அப்பில் உங்கள் ஐடிஆர்-ஐ பதிவு செய்வது எப்படி..?
* கிளியர் டேக்ஸின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு செய்தியை அனுப்புவதன் மூலம் தொடங்கலாம்.
* பொருத்தமான ஐடிஆர் படிவத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போதைக்கு, இந்த சேவை ஐடிஆர் 1 மற்றும் ஐடிஆர் 4-ஐ மட்டுமே ஆதரிக்கிறது. மொத்த வருமானம் ரூ.50 லட்சத்திற்கும் குறைவாகவும், விவசாய வருமானம் ரூ.5,000 வரை மற்றும் ஒரே ஒரு வீட்டுச் சொத்தின் உரிமையுடனும் சம்பளம் வாங்கும் நபருக்கு மட்டுமே இந்த படிவம் பொருந்தும்.
* வரி செலுத்துவோர் படங்கள், ஆடியோ அல்லது உரையின் மூலம் தேவையான தகவல்களைச் சமர்ப்பிக்கலாம். தனிப்பட்ட விவரங்கள், வருமான விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்கள் இதில் அடங்கும்.
10 மொழிகள் :
வாட்ஸ்அப் ஐடிஆர் தாக்கல் செய்யும் சேவையானது ஆங்கிலம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில் இருக்கிறது. இதில், உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்யலாம். வருமான வரிக் கணக்கை தாக்கல் (Income Tax) செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31ஆம் தேதி கடைசி தேதியாகும்.
Read More : நிரம்பி வழியும் அணைகள்..!! காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!