கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 2 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், இரவு நேரங்களில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் வரும் 27ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 2 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை, குந்தா தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Read More : நிரம்பி வழியும் அணைகள்..!! காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!