ஆத்தூர் அருகே ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, பிளஸ் 1 படிக்கும், 3 மாணவர்கள் மீது, ‘போக்சோ’ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தநிலையில், கடந்த 22ம் தேதி பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் 3 பேர், 7ம் வகுப்பு படிக்கும், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. அதாவது, பள்ளி முடிந்து கழிப்பறைக்கு சென்ற மாணவியை நோட்டமிட்ட மாணவர்கள், பின் தொடர்ந்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர், இதுகுறித்து ஆசிரியர்களிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த 10 தேதி மாணவியின் பெற்றோர்கள் உதவி எண்ணில் புகார் அளித்தனர்.

இதையடுத்து சேலம் எஸ்.பி. கவுதம் கோயல் உத்தரவையடுத்து பள்ளிக்கு சென்ற சென்ற ஆத்தூர் மகளிர் போலீசார், விசாரணையை மேற்கொண்டனர். அவர்கள் கூறியதாவது, மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தொடர்பாக போக்சோ வழக்கு பதிந்து மானவர்களிடம் விசாரித்துள்ளோம். விசாரணை முடிந்த பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கூர்நோக்கு இல்லத்தில், 3 மாணவர்களும் ஒப்படைக்கப்படுவார்கள் என்று கூறினர்.

Readmore: இருவேறு மதத்தை சேர்ந்தவர்கள் திருமணத்தை பதிவு செய்தால் மட்டுமே செல்லும்!. நீதிமன்றம் அதிரடி!