இலவசமாக இறைச்சி தர மறுத்ததால் ஆத்திரத்தில் சுடுகாட்டில் இருந்து சடலத்தை தோண்டி எடுத்துவந்து கறிக்கடை முன்பு வீசி சென்ற நபரால் பொதுமக்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் மணியரசன். இறைச்சி கடை நடத்தி வரும் நிலையில், ஞாயிற்றுக் கிழமை அன்று இறைச்சி மக்கள் அதிகளவில் வந்தனர். இந்தநிலையில், கூலித்தொழிலாளியான குமார் என்பவர், மாயனத்தில் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில், இறைச்சிக்கடைக்கு சென்ற குமார், இலவசமாக இறைச்சியை வேண்டும் என்று கடை உரிமையாளரிடம் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெவித்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த குமார், கோபத்துடன் அருகில் இருக்கும் மயானத்தில் இருந்து சடலத்தை தோண்டி எடுத்து கொண்டு வந்து கடை முன்பு போட்டுவிட்டு சென்றுள்ளார். இந்த சடலம் புதைக்கப்பட்ட சில நாட்கள் ஆனதால், உடல் முழுவதும் அழுகி எலும்புகூட்டாக இருந்தது. மேலும் துர்நாற்றம் வீசியதால் இறைச்சி வாங்க வந்த பொதுமக்கள் அச்சமடைந்து ஓட்டம்பிடித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி, குமாரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.