ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதை 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். இந்த மலைப்பாதை தமிழக, கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய போக்குவரத்து பகுதியாகும். வாகனங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் திம்பம் மலைப்பாதையில் அணிவகுத்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பண்ணாரி சோதனை சாவடி வரை வாகனங்கள் அணிவகுத்து நின்று ஊர்ந்து செல்கின்றது. புளிஞ்சூர் சோதணை சாவடியில் இருந்து பண்ணாரி வரை 40 நிமிடத்தில் கடக்க வேண்டிய தொலைவை தற்போது 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை இந்த பாதையை கடக்க முடிகிறது.

இதனால் தினம் தினம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். இதனால் துக்க நிகழ்ச்சி, அவசர தேவை, மருத்துவம், கல்லூரி, அரசு உழியர்கள், பணிகளுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எரிபொருள் தேவையும் அதிக அளவில் தேவைப்படுகிறது. அதேபோல் திம்பம் மலைப்பாதை என்பது குறைந்த அளவே எடையை தாங்க கூடிய நிலையில் கடந்த காலத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வாகனங்கள் இடைவிடாமல் மலைப்பாதையில் நிற்பதால் அதிக பாரம் தாங்காமல் மலைப்பாதையில் விரைவில் மண்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், வளைவுகளில் திரும்பும்போது சில வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதும் தொடர் கதையாகி வருகிறது.

அந்தவகையில், திம்பம் மலைப்பாதையில் சத்தியமங்கலம் நோக்கி பால் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி சென்றுக்கொண்டிருந்தது. மலைப்பாதையின் வளைவில் திரும்பும் போது திடீரென லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், டேங்கரில் இருந்த 20,000 லிட்டர் பால் சாலையில் கொட்டி ஆறாக ஓடி வீணானது. மேலும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர்சேதமோ, காயமோ ஏற்படவில்லை.

Readmore: அப்படிபோடு!. ஆன்லைனில் கேம் விளையாடுகிறீர்களா?. இனி ஆதார் கட்டாயம்!. இந்த டைமிங்கல தான் விளையாடனும்!. அதிரடி உத்தரவு!