நாம் தற்போது நவீன யுகத்தில் வாழ்ந்து வருகிறோம். விஞ்ஞான வளர்ச்சியால் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய கலாசாரம், உணவு, உடை, பழக்க வழக்கம், வாழ்க்கை முறை ஆகியவற்றை இணையம் வழியாக நொடிப் பொழுதில் அறிந்து கொள்கிறோம். அதில் பிடித்த உடை, உணவுகள், வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறோம். குறிப்பாக க்ரில் சிக்கன், பர்கர், ஸ்பிரிங் ரோல், ஷவர்மா, நூடுல்ஸ், ஃப்ரைட் ரைஸ், இறைச்சி வகைகள் எனப் பல்வேறு விதமான துரித உணவுகளை உட்கொள்ளும் ஆர்வம் இளையோர் முதல் பெரியவர்கள் ஆர்வம் பெருகி வருகிறது. இதேபோல் இனிப்பு வகைகளையும் பிடிக்காதவர்கள் எவரும் இருப்பதில்லை

இருப்பினும், பல்வேறு இடங்களில் சில உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் உணவுகளை தயாரிப்பது தொடர்பான வீடியோ அவ்வபோது சமூக வலைதளங்களில் வைரலாகும். அதாவது சமைக்கப்படும்போது சமையல் காரர்கள், உணவில் எச்சில் துப்புவதும், சிறுநீர் கழிப்பதுமான பல அருவருக்கத்தக்க சம்பவங்கள் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தவகையில் தற்போது சமையல் காரர் ஒருவர் குலாப் ஜாமூன் வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தில் சிறுநீர் கழிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தை சக ஊழியர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

சிலர் இந்த காணொளி போலியானது என்றும், அவர் பாட்டிலில் இருந்து தண்ணீர் ஊற்றுவதாகவும் கூறியுள்ளனர். இந்த காணொளியைப் பார்த்த வேறு சிலர் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதுபோன்ற வீடியோக்களைப் பார்த்த பிறகு, மக்கள் வெளியில் இருந்து உணவு சாப்பிடாமல் இருப்பது நல்லது என்று கூறுகிறார்கள். 

Readmore:சீமானை விடுவிக்க முடியாது; தொடர்ந்து அவர் நீதிமன்றப் படியேறினால்தான் நிதானம் வரும்!. உயர்நீதிமன்றம் அதிரடி!