தங்கம், பல ஆண்டுகளாக மனித குலத்தை கவர்ந்து வந்துள்ளது. இதை நகையாக பயன்படுத்துவதைத் தவிர, காலப்போக்கில் மிகவும் பயனுள்ள நிதி ஆதாரமாகவும் மாறியுள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வதற்கான அனைத்து விருப்பங்களில் தங்க நாணயங்களும் ஒன்றாக இருக்கலாம். தங்கத்தின் மதிப்பு காரணமாக காலங்காலமாக, மக்கள் தங்கத்தை சேகரித்து மிகுந்த ஆர்வத்துடன் பதுக்கி வைத்து வருகின்றனர். வரலாற்று ரீதியாகவே, பணவீக்கம் மற்றும் பண மதிப்பிழப்புக்கு எதிராக பாதுகாப்பதில் தங்கம் திறம்பட செயல்படுகிறது.

இந்தநிலையில், சமீபத்திய நாட்களில் தங்கத்தின் விலை வியத்தகு ஏற்றத்தை சந்தித்தது, இது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக தங்கம் முதலீட்டாளர்களையும் பொதுமக்களையும் வருத்தமடைய செய்துள்ளது. அதன்படி, இன்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு சுமார் ரூ.760 ஆக உயர்ந்துள்ளது. அதாவது நேற்று ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.7,810 ஆக இருந்தது, ஆனால் தற்போது ரூ.95 உயர்ந்து ரூ.7,905 ஆக உள்ளது. இதனிடையே, ஒரு கிராம் 24 காரட் தங்கத்தின் விலையும் 103 ரூபாய் அதிகரித்து 8,623 ரூபாயாக உள்ளது. மேலும் 1 சவரன் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.760 அதிகரித்து தற்போது ரூ.63,240 ஆகவும், 10 கிராம் 22 காரட் தங்கம் ரூ.79,050 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை தாண்டி வெள்ளியும் அதிகரித்து வருகிறது. இன்று கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது வெள்ளி விலை. அதாவது நேற்று ரூ.106 ஆக இருந்த ஒரு கிராம் வெள்ளியின் விலை தற்போது ரூ.107 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1000 அதிகரித்து மொத்தம் ரூ.1,07,000 ஆக உள்ளது. அமெரிக்கா மட்டுமின்றி, பல காரணிகள் தங்கத்தின் விலையில் மாற்றங்களுக்கு காரணமாக உள்ளன. புவிசார் அரசியல் பதட்டங்கள், பண மதிப்பு ஏற்ற இறக்கங்கள் மற்றும் மத்திய வங்கி கையிருப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியாவில், பண்டிகைகள் மற்றும் திருமணங்களின் போது உள்நாட்டு தேவை தங்கத்தின் விலையை பாதிக்கிறது.

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்க பொருளாதார மந்த நிலை பணவீக்கம் தொடர்ந்து இருப்பதால், அமெரிக்க ரிசர்வ் வட்டி விகித உயர்வை மேலும் அதிகரிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்க விலை உயர்வுக்கு வழிவகுக்கும். எனவே, இன்னும் சில காலம் தங்கத்தின் விலை மேலும் உயரும் சூழ்நிலைதான் நிலவுவதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

Readmore: “அம்மா எங்க”! பிள்ளைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி!. விபரீத ஆசையை கைவிடாத டீ மாஸ்டரை ஓட ஓட வெட்டிய கணவன்!.