சென்னையில், வேக வைக்காத பச்சை கேரட்டை சாப்பிட்டுக்கொண்டிருந்த 2 வயது குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தட்டான்குளம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இரவது மனைவி பிரமிளா. இந்த தம்பதிக்கு 2 வயதில் லித்திஷா என்ற குழந்தை உள்ளது. இந்த நிலையில், பிரமிளா குழந்தையுடன் பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது விளையாடிக்கொண்டிருந்த குழந்தை, வேக வைக்காத கேரட்டை சாப்பிட்டிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது கேரட்டின் சிறு துண்டு, தொண்டையில் சிக்கியதால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மயங்கி விழுந்த குழந்தையை உறவினர்கள் வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை செய்து மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்தனர். இதையடுத்து, துரதிருஷ்டவசமாக மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Readmore: “இரவில் அழுத்துட்டே இருந்த 4 வயது குழந்தை”!. சுவரில் அடித்து கொலை செய்த பகீர்!. தாயின் கள்ளக்காதலனின் கொடூர செயல்!