எடப்பாடி அருகே குள்ளம்பட்டி மூலப்பாதை பகுதியில் வாகன தணிக்கையின்போது, வரி செலுத்தாத காரணத்தால் 4 வாகனங்களை பரிமுதல் செய்த அதிகாரிகள் சுமார் 3 லட்சம் ரூபாய் அபாரதம் விதித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா, அரசிராமணி குள்ளம்பட்டி, மூலப்பாதையில் இருந்து தேவூர் வழியே எடப்பாடி செல்லும் சாலையில் சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்ரமணியன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனங்களை பரிசோதனை செய்தனர். அந்த வழியாக சென்ற 4 மணல் அள்ளும் டிப்பர் லாரி, 3 பொக்லைன் வாகனங்களை சோதனையிட்டதில், அரசுக்கு வாகன வரி செலுத்தாமல் இயக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, 3 பொக்லைன் வாகனங்கல் மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், 3 பொக்லைன்களுக்கு, 2.50 லட்சம் ரூபாய், பாரம் ஏற்றிச்சென்றதற்காக டிப்பர் லாரிக்கு, 40,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து பறிமுதல் செய்த வாகனங்களை தேவூர் காவல்நிலையத்தில் அலுவலர்கள் ஒப்படைத்தனர்.

Readmore: “இரவில் அழுத்துட்டே இருந்த 4 வயது குழந்தை”!. சுவரில் அடித்து கொலை செய்த பகீர்!. தாயின் கள்ளக்காதலனின் கொடூர செயல்!