11ம் வகுப்பு மாணவனிடம் ஆசை வார்த்தை கூறி காதல் வலையில் வீழ்த்தி ஓட்டம் பிடித்த 2 குழந்தைகளுக்கு தாயான 24 வயது இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் வினோதினி(24). திருமணம் ஆகி, கணவர், 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவனுடன் வினோதினி பழகி வந்துள்ளார். நாளடவையில் இருவருக்கும் இடையேயான நட்பு காதலாக மாறியுள்ளது. இந்தநிலையில் திடீரென கடந்த டிசம்பர் மாதம் மாணவன், வீட்டை விட்டு வெளியூர் சென்றதாக கூறப்படுகிறது. அதாவது, பள்ளிக்கு சென்ற சிறுவன் மாலை வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் அக்கம்பக்கத்தி தேடியுள்ளனர். இதையடுத்து, பெரியபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, விசாரணையில் வினோதினிதான் ஆசை வார்த்தை கூறி சிறுவனை வெளியூருக்கு அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கல்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தனியாக தங்கியிருந்த சிறுவனையும், வினோதினியையும் போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் கூறுகையில், இருவரது வீடும் அருகிலேயே இருப்பதால், மாணவரும், வினோதினியும் நல்ல முறையிலேயே பேசி வந்துள்ளனர்.. ஆரம்பத்தில் வினோதினியும், மாணவரும், அக்கா, தம்பி என்றுதான் கூப்பிடுவார்களாம்.
ஆனால், வினோதினிக்குதான், நாளடைவில் மாணவர் மீதுவிபரீத ஆசை வந்ததாகவும், நாளுக்கு நாள் மாணவருடனான நெருக்கமும் அதிகரித்துள்ளது என்றும் தெரியவந்தது. இருவருக்கும் அதிக வயது வித்தியாசம் என்பதால், குடும்பத்தினருக்கும், அக்கம்பக்கத்தினருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. இதனை பயன்படுத்திக்கொண்டு இளம்பெண் குழந்தைகளை விட்டு சென்றது விசாரணையில் அம்பலமானதாக போலீசார் தெரிவித்தனர்.
Readmore: ஒல்லியாக இருப்பவர்களிடையே மாரடைப்பு அபாயம் அதிகரிப்பு!. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!.