அண்ணன், தம்பி ஆகிய இருவரை ஓட ஓட சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டம் பட்டாபிராம் அடுத்துள்ள ஆயில் சேரி என்ற பகுதியைச் சேர்ந்தவர் ரெட்டை மலை சீனிவாசன்(28). பிரபல ரவுடியான இவரது தம்பி ஸ்டாலின்(25). இந்தநிலையில் அண்ணன் தம்பி இருவரும் வெவ்வெறு பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். அதாவது, இரட்டை மலை சீனிவாசன் மீது திருட்டு வழக்குகள் உள்ளன. இவரது தம்பி ஸ்டாலின். ரவுடி பட்டியலில் C பிரிவில் இடம் பெற்றுள்ளார். இதில் ரவுடி ஸ்டாலின் வீட்டின் அருகே ஆயில் சேரியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்தார். இவரது அண்ணன் இரட்டைமலை சீனிவாசன் ஆவடி பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டு இருந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பட்டாபிராம் மற்றும் ஆவடி காவல்துறையினர் இருவர் சடலத்தையும் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இரட்டை கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் இது தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதற்கட்ட விசாரணையில், இட்டை மலை சீனிவாசனிடம் தருண், சாலமன், இளங்கோ, ஜோகன், மாதேஷ் அடங்கிய கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர் இருவரையும் கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இரட்டை கொலை குறித்து காவல்துறையினர் கொலையாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர். முன்னதாக, கொலையாளிகளின் அண்ணனும் 2017 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பிகள் மூவரும் கொலையான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: 3 நிமிடங்கள் மட்டுமே மரணம்..!! நரகத்தை நேரில் பார்த்து வந்தவரின் அனுபவம்..!! சிலிர்க்க வைக்கும் தகவல்..!!