கடந்த 10 ஆண்டுகளாக பக்கவாட்டு சுவர் இடிந்த நிலையில் கிடக்கும் வாய்க்கால் பாலத்தை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த அரசிராமணி மூலப்பாதை அருகே வெள்ளாளப்பட்டி மாரியம்மன் கோவிலில் இருந்து மேட்டுப்பாளையம் பெருமாள் கோவில் செல்லும் வழியில் முக்கிய வாய்க்கால்பாலம் ஒன்று அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீர் இந்த பாலம் வழியாக பள்ளிபாளையம் ஆற்றில் கலக்கிறது. இந்நிலையில், இப்பாலம் வழியாக அதிகப்படியான பள்ளி, கல்லூரி பேருந்துகள் மற்றும் பள்ளி மாணவ – மாணவிகள் சைக்கிளில் செல்வது வழக்கம்.

அதுமட்டுமின்றி கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்கிறது. இதற்கிடையே, இந்த பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளது. இப்பாலத்தின் பக்கவாட்டு சுவர் இல்லாததால் இதுவரை 30-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் இந்த வாய்க்காலில் விழுந்துள்ளன. இதனால் அப்பாலம் வழியாக செல்வார்கள் எப்போதுமே அச்சத்தோடு செல்கின்றனர்.

மேலும், இது சம்பந்தமாக பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த ஒரு பயனும் இல்லை. அரசு அதிகாரிகள் மிகவும் மெத்தன போக்கில் செயல்படுவதாக அப்பகுதி மக்கள் மிகுந்த குற்றம்சாட்டியுள்ளனர். இது சம்பந்தமாக செய்திகளாக வெளியிட்டும் எந்த பயனும் இல்லை என்றும் பள்ளி குழந்தைகளுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்குள் அதிகாரிகள் விரைந்து வந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More : 3 நிமிடங்கள் மட்டுமே மரணம்..!! நரகத்தை நேரில் பார்த்து வந்தவரின் அனுபவம்..!! சிலிர்க்க வைக்கும் தகவல்..!!