சவுதியில் இருக்கும் தனது கணவர், பணத்திற்காக தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய அவரது நண்பர்களை அனுமதித்ததாகவும், வன்கொடுமை வீடியோவை வெளிநாட்டில் இருந்தபடியே பார்த்து ரசித்ததாகவும் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ஒரு மாத கர்ப்பிணியான 35 வயது பெண் அளித்த புகாரின்படி, உத்தரப் பிரதேச மாநிலம், புலந்த்ஷாஹரில் உள்ள குலாத்தியை சேர்ந்த ஒருவரை கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் (13 மற்றும் 3 வயது) மற்றும் இரண்டு பெண்கள் (11 மற்றும் 7 வயது) என நான்கு குழந்தைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். . அவரது கணவர் ஒரு ஆட்டோமொபைல் மெக்கானிக்காக சவுதியில் வேலை செய்கிறார் மற்றும் வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை வீட்டிற்கு வருவார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் இரண்டு நண்பர்களுடன் வீட்டிற்கு வந்தார். அப்போது, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய நண்பர்களுக்கு அனுமதித்தார் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, மீண்டும் கணவர் சவுதிக்கு சென்ற நிலையிலும் அவரது நண்பர்கள் மீண்டும் தன்னை வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும், இந்த வீடியோக்களை கணவரே சவுதியில் இருந்து பார்த்து ரசித்ததாகவும் கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, அவர்கள் பணம் கொடுத்ததால் அமைதியாக இருக்கும்படி அவர் என்னிடம் கூறினார்,” என்று பாதிக்கப்பட்ட பெண் கூறினார். விவாகரத்து செய்து விடுவதாகவும் அச்சுறுத்திய நிலையில் எனது பிள்ளைகளுக்காக அமைதியாக இருக்குமாறு தனது கணவர் கேட்டுக் கொண்டதாக அந்த பெண் மேலும் தெரிவித்துள்ளார். அதாவது கடந்த 3 ஆண்டுகளாக இந்த கொடுமைகளை அனுபவித்ததாக அப்பெண் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அப்பெண்ணின் புகார் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இக்கொடுமை குறித்து இரு வாரங்களுக்கு முன்னர்தான் தங்களுக்குத் தெரியவந்ததாக அப்பெண்ணின் சகோதரர் கூறியுள்ளார். தன் சகோதரியின் கணவரும் அவருடைய நண்பர்களும் வெளிநாட்டிற்குத் தப்பியோட முயன்று வருகின்றனர் என்றும் இவ்விவகாரத்தில் தங்களுக்கு நீதி வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Readmore: நான் ரெடி; நீங்க ரெடியா? எடப்பாடியில் களம் காணத் தயாராகும் காளைகள்!. இளைஞர்கள் தீவிர பயிற்சி!