கெங்கவல்லி பகுதியில் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்ட 15 சிறுமி 4 மாத கர்ப்பமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், அவரது பெற்றோர்கள் சிறுமியை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், சிறுமியிடம் விசாரித்துள்ளனர். கெங்கவல்லி பகுதியை சேர்ந்த விக்னேஷ்(29). கூலித் தொழில் செய்து வரும் இவருக்கும் சிறுமிக்கும் இடையே சில வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், வீட்டிற்கு தெரியாமல் இருவரும் கடந்த 2024 செப்., 16ம் தேதி, திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
இதையடுத்து, வழக்கம்போல் அவரவர் வீட்டில் வசித்து வந்த நிலையில், யாருக்கும் சந்தேகம் வராதபடி, அடிக்கடி தனிமையில் சந்தித்து உறவில் இருந்து வந்துள்ளனர். இதனால், சிறுமி கர்ப்பமானது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, குழந்தை திருமணம், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த ஆத்தூர் மகளிர் போலீசார், தலைமறைவாக உள்ள இளைஞர் விக்னேஷை தேடி வருகின்றனர்.
Readmore: உயிரை காவு வாங்கிய “சிக்கன்”!. புரை ஏறியதால் மேட்டூர் வங்கி மேலாளர் உயிரிழந்த சோகம்!.