மும்பையின் மீரா பயந்தரில் 15வயது சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்த நபரை நிர்வாணமாக்கி நடுரோட்டில் தர்ம அடிக்கொடுத்த சம்பவத்தின் விடியோ வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மீரா பயந்தர் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வரும் நிலையில், தினந்தோறும் நடந்தே பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்தநிலையில்,அந்த சிறுமியை தினசரி 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் பின் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் கூறி அழுதார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், மறுநாள் அந்த சிறுமி ஸ்கூலுக்கு செல்லும் சாலையில் மறைந்திருந்து கண்காணித்தனர்.

அப்போது, அந்த சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் அந்த நபர் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த பெற்றோர்கள், அந்த நபரை பிடித்து நடுரோட்டில் ஆடைகளை கிழித்து அரைநிர்வாணமாக்கி தர்ம அடித்து கொடுத்து இழுத்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அந்த நபர் மீது போலீசார் போக்சோவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Readmore: மீண்டும் அனல் பறக்கப் போகும் அரசியல் களம்..!! ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல்..!! வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை எப்போது..?