கணவரை இழந்த நிலையில் கள்ளக்காதலனை ஏமாற்றிவிட்டு வேறொரு இளைஞருடன் உல்லாசமாக இருந்து வந்த பெண்ணை நண்பருடன் சேர்ந்து இளைஞர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கஞ்சனூரை சேர்ந்தவர் மாதேஷ், இவரது மனைவி தீபா(27). கடந்த ஓராண்டுக்கு முன்பு கணவர் உயிரிழந்ததுள்ளார். இவர்களுக்கு கவுசிக்தரன் (12) என்ற மகனும், ஷிவானி (10) என்ற மகளும் உள்ளனர். இந்தநிலையில், தந்தை வீட்டில் இருந்து, போச்சம்பள்ளியில் தனியார் ஸ்கூட்டர் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் கேண்டீனில் வேலை செய்து வரும் தீபா, கடந்த 2 நாட்களுக்கு முன், இரவு வழக்கம் போல் தீபா பணியை முடித்து கொண்டு வீட்டிற்கு தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, மர்மநபர்கள் பின் தொடர்ந்ததால் அதிர்ச்சியடைந்த தீபா, இவரது தனது நண்பரான கவுதமுக்கு போனில் தொடர்பு கொண்டு நடந்ததை கூறியுள்ளார்.
இதையடுத்து, நான் உன் பின்னாலேயே வருகிறேன் பயப்படாமல் போ என்று கவுதம், தீபாவிடம் கூறியதாக தெரிகிறது. கஞ்சனூர் முருகன் கோவில் அருகில் சென்றுகொண்டிருந்தபோது, பின் தொடர்ந்த மர்மநபர்கள் வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் தீபாவை சரமாரியாக குத்திவிட்டு தப்பியுள்ளனர். தான் தாக்கப்பட்டதை கவுதமுக்கு கூறியுள்ளார் தீபா. அப்போது அங்கு சென்ற கவுதம் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த தீபாவை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே தீபா பரிதாபமாக இறந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சாமல்பட்டி போலீசார், சம்பவம் குறித்து கவுதமிடம் விசாரித்துள்ளனர். மேலும் தீபாவின் போனுக்கு கடைசியாக பேசியது யார் என்பதை வைத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசாருக்கு துப்பு துலங்கியது. அதாவது, கணவருடன் இருந்தபோது, அவரது பக்கத்து வீட்டுக்காரர் மிதுன் சக்கரவர்த்தியுடன் பழக்கம் ஏற்பட்டிருந்ததும், அவர்கள் தகாத உறவுமுறையில் அடிக்கடி உல்லாசமாகவும் இருந்துள்ளனர். இதனால் கணவர் மாதேஷ் – தீபா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர் மாதேஷ் உடல்நலக் குறைவால் இறந்துள்ளார்.
இதையடுத்துதான் கவுதமுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடவையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இது மிதுன் சக்கரவர்த்திக்கு தெரியவரவே, ஆத்திரமடைந்த அவர் தீபாவிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் கொலை செய்ய திட்டமிட்ட மிதுன், நண்பர்களின் உதவியுடன், பணிமுடிந்து திரும்பிய வழியில் தீபாவை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. மேலும் தப்பியோடிய மிதுன் மற்றும் நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.