சேலம் மாவட்ட இளைஞா்களுக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் டிசம்பர் 20ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் தகவல் தொழில்நுட்பம், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம், ஜவுளி, உற்பத்தி, வங்கி சேவைகள் உள்ளிட்ட முக்கிய துறைகளை சாா்ந்த நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு வேலையாட்களை தேர்வு செய்யவுள்ளனர்.

சேலம் மாவட்டம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை இந்த முகாம் நடைபெற்றவுள்ளது. 8, 10, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, செவிலியா், ஆசிரியா், தொழிற்கல்வி பட்டப்படிப்பு போன்ற அனைத்து விதமான கல்வித் தகுதி உள்ளவா்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : பிஎம் கிசான் திட்டம்..!! வங்கிக் கணக்கில் ரூ.2,000..!! 19-வது தவணை எப்போது..? வெளியான முக்கிய தகவல்..!!