தமிழ் புதல்வன் திட்டம் மூலம் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது போல, புதுமைப்பெண் திட்டம் மூலம் பெண்களுக்கு எப்படி ரூ. 1000 வழங்கப்படுகிறதோ, அதே போல மாணவர்களுக்கும் தமிழ் புதல்வன் திட்டம் மூலம் ரூ. 1000 வழங்கப்படுகிறது. இம்மாதம் மூன்றாவது தவணையாக ரூ. 1,000 விரைவில் வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தின் புதுமை பெண் திட்டம் மூலம், அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் படிப்பை பாதியில் நிறுத்தாமல் தொடர்ந்து படிப்பதற்கு ஊக்குவிக்க இந்த திட்டம் உதவுகிறது. இதற்காக பட்ஜெட்டில் ரூ. 698 கோடி ஒதுக்கப்பட்டது. புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் கடந்த மாதம் முதல்வர் முக ஸ்டாலினால் தொடங்கப்பட்டது.

மேலும் அரசுப் பள்ளிகளில் இருந்து உயர்கல்வி செல்லும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், இந்த சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க தமிழக அரசு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம், மாணவிகள் உயர்கல்வி படிப்பை முடிக்கும் வரை பெண்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும். மாணவிகள் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை இந்த பணம் வழங்கப்படும். இதனை பெற அவர்கள் எங்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் அது நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளுக்குச் செலுத்தப்படும். இது கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் பெண்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள தகுதி வாய்ந்த பெண்களுக்கு தமிழக அரசு மாதம் ரூ. 1000 உதவி தொகையை வழங்கி வருகிறது. முன்பு இந்த திட்டத்தில் சேர பல்வேறு விதிகளை அரசு வகுத்து இருந்தது. இந்நிலையில், தற்போது அதில் சில தளர்வுகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள், புதிதாக ரேஷன் கார்டு பெற்ற பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள் என அனைவருக்கும் இந்த உதவித்தொகை கிடைக்கும்.

பெண்களுக்கான இந்த சிறப்புத் திட்டத்தில் ஏற்கனவே உள்ள நபர்கள் தவிர, புதிய பெண்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். இம்முறை சுமார் 250,000 பேர் புதிதாக சேர்க்கப்பட்டு பணம் பெற உள்ளனர். இதில், புதிதாக திருமணமான பெண்கள் மற்றும் ரேஷன் கார்டு பெற்றவர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்த மாதம் 14 ஆம் தேதி சனிக்கிழமையன்று அவர்கள் பணத்தைப் பெறுவார்கள். இந்த மாதம் ஒவ்வொருவருக்கும் மொத்தமாக 3,000 ரூபாய் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Readmore: பாஸ்போர்ட் சேவை முதல் சிறிய சேமிப்பு திட்டங்கள் வரை!. போஸ்ட் ஆபீஸில் இத்தனை நன்மைகளா?.