பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில் சனிக்கிழமை காலை முதல் தற்போது வரை மழை தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால், ஏராளமான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இந்தநிலையில், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுகளில் தங்க வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்தநிலையில் தொடர் மழையால் ஏற்காடு மலைப்பகுதியை இணைக்கும் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், ஏற்காட்டில் உள்ள 22 கிராமங்களுக்கான சாலை போக்குவரத்து சனிக்கிழமை முதல் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மலைப்பாதையில் பல்வேறு கொண்டை ஊசி வளைவுகளில் மரங்கள் வேரோடு முறிந்தன. இதனால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் மரங்களை அகற்றினர். இதனால், போக்குவரத்து மீண்டும் துவங்கியது.
Readmore: சேலத்தில் தொடர் மழை!. கெங்கவல்லியில் வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து சேதம்!. மக்கள் கடும் அவதி!.