திருச்செங்கோட்டில் தனியார் கல்லூரியில் 3வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் காவிய தர்ஷினி. இவர், திருச்செங்கோடு அருகே எளையாம்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் மகளிர் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். கல்லூரியில் சேர்ந்து 2 நாட்களே ஆனநிலையில், காவிய தர்ஷினி அவர் தங்கியிருந்த விடுதியின் அருகே தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் போலீசாருக்கு தகவலளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பான போலீசார் விசாரணையில், காவிய தர்ஷினியின் சகோதரர் கடந்த ஆண்டு உயிரிழந்ததால், அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் சம்பவத்தன்று காவிய தர்ஷினி கல்லூரி கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. கல்லூரியில் சேர்ந்து 2 நாட்களே ஆன நிலையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: கொட்டித்தீர்த்த கனமழை!. வெள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர்!. சடலங்களாக மீட்கப்பட்ட மாணவர்கள்!.