நாமக்கல்லில் கடன் தொல்லை காரணமாக கணவன் – மனைவி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் முதலைப்பட்டி ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர்கள் குணசேகரன் – சந்திரகலா தம்பதி. இருவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று நீண்ட நேரமாகியும் இருவரும் வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து போலீசாருக்கு தகவலறிந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கதவை திறந்துபார்த்தபோது இருவரும் விஷமருந்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில், கடன் பிரச்னையால் இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து நாமக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Readmore: 10ஆம் வகுப்பு மாணவர்களே..!! தமிழ்நாடு அரசின் ரூ.10,000 உதவித்தொகை வேண்டுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!!